தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Tokyo ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை கனடா மொத்தம் நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.
கனடிய வீரர் Damian Warner தங்கம் வென்று ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். பத்து தடகள நிகழ்வுகள் அடங்கிய decathlonனில் Warner தங்கம் வென்றார்.
31 வயதான இவர், இந்த போட்டியில் 9,018 புள்ளிகளை பெற்று  ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். தவிரவும் decathlonனில் தங்கம் வென்ற முதல் கனடியர் என்ற பெருமையையும் Warner பெற்றுள்ளார்.
பெண்களுக்கான 200 மீட்டர் படகுப் போட்டியில் Laurence Vincent-Lapointe வெள்ளி வென்றார்.
Lauriane Genest, பெண்களுக்கான சைக்கிள் ஓட்டுதல் போட்டியில்  வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றார். Evan Dunfee 50 KM ஓட்டப் பந்தயத்தில் (race walk) வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
Tokyo ஒலிம்பிக்கில் இதுவரை கனடா 5 தங்கம், 5  வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

கனடிய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மாத்திரமே COVID தடுப்பூசிகளை இதுவரை பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

கனேடிய பூர்வீக தலைவர்கள், ஆளுநர் நாயகம், மன்னர் Charles சந்திப்பு

Lankathas Pathmanathan

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment