தேசியம்
செய்திகள்

தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது: தலைமை பொது சுகாதார அதிகாரி

COVID தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை பல வாரங்கள் சரிவுக்குப் பின்னர் அண்மைய நாட்களில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக Tam கூறுகிறார்.

பொது சுகாதார நடவடிக்கைகள் பரவலாக நீக்கப்பபடும் நிலையில் இந்த அதிகரிப்பை எதிர்பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

கனடாவில், COVID தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தினசரி சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் இருந்து 11 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் இதே காலகட்டத்தில் 14 சதவீதம் குறைந்துள்ளது.

Booster தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், கடைசி அலையில்
Omicron திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இடங்களில் BA.2 திரிபின் பரவல் அதிகமாக இருப்பதாக துணை தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo தெரிவித்தார்.

கனடாவில், BA.2 ஒப்பீட்டளவில் மெதுவாக பரவுகிறது எனவும் ஏனைய வகை திரிபுகளை விட கடுமையானதாக தோன்றவில்லை எனவும் Tam கூறினார்.

 

Related posts

கனேடியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Lankathas Pathmanathan

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment