தேசியம்
செய்திகள்

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான  தடையை கனடா  July மாதம் 21ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை கனடா மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra திங்கட்கிழமை அறிவித்தார். இதன் மூலம்  இந்தியாவில் இருந்து நேரடி வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்கள் கனடாவுக்கு வருவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படும்.

ஆனாலும், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கான பயண தடையை நீட்டிப்பதிலை என மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது

திங்கட்கிழமை காலாவதியாகிய இந்தியாவில் இருந்து வரும் விமானத் தடை பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி காயம்!

Gaya Raja

February மாதத்தில் பணவீக்கம் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!