தேசியம்
செய்திகள்

Ontarioவி்ன் சுகாதார பராமரிப்பு முறையை உறுதிப்படுத்தும் திட்டம்

நோயாளிகளுக்கான படுக்கைகள், பணியாளர்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் சுகாதார பராமரிப்பு முறையை உறுதிப்படுத்தும் திட்டத்தை Ontario அரசாங்கம் வெளியிட்டது.

சுகாதார பாதுகாப்பு அமைப்பு நிலைத்தன்மையிலும் மீட்பிலும் கவனம் செலுத்தும் Ontario அரசாங்கத்தின் ‘Plan to Stay Open’ திட்டம் வியாழக்கிழமை (18) வெளியானது.

சுகாதார அமைச்சர் Sylvia Jones இந்த திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு ஏதுவாக Progressive Conservative அரசாங்கம் சட்டமூலம் ஒன்று மாகாணசபையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அடுத்த சில மாதங்களில் சுவாச நோய்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திட்டம் வெளியானது.

ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களை இணைப்பது இந்த திட்டத்தின் பிரதான அம்சமாகும்.

இந்த திட்டம் நோயாளிகள் தேவையான கால எல்லையில் சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும் என நீண்ட கால பராமரிப்பு அமைச்சர் Paul Calandra கூறினார்.

Related posts

Toronto Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவு

Lankathas Pathmanathan

விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment