தேசியம்
செய்திகள்

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Quebec கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை என திருத்தந்தை  அறிவித்துள்ளார்..

Quebec உயர் நீதிமன்றத்தில் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில்  Marc Ouellet பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

ஆனாலும் Ouelletக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை என  திருத்தந்தை பிரான்சிஸ் வியாழக்கிழமை (18) அறிவித்துள்ளார்.

“F.” என மாத்திரம் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் தாக்கல் செய்த  நீதிமன்ற ஆவணங்களில் இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் Ouellet குறித்து போப் திருத்தந்தைக்கு F. கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டுகளை விசாரிக்கதந்தை Jacques Servaisசை நியமிக்கப்பட்டார்.
குற்றஞ்சாட்டியவர் திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திலோ அல்லது சேகரிக்கப்பட்ட பிற சாட்சியங்களிலோ, விசாரணையை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆதாரம் இல்லை என இன்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

Gaya Raja

Quebec தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் Legault

Lankathas Pathmanathan

Leave a Comment