தேசியம்
செய்திகள்

கனடியர்களை ஒன்றிணைய அழைப்பு விடுத்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Mark Carney!

கனடியர்கள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததன் மூலம் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை Liberal தலைவர் Mark Carney ஆரம்பித்தார்.
கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிட்டார்.
அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump-பின் வர்த்தகப் போர், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சவாலில் கனடாவை வழிநடத்த கனடியர்கள் இடமிருந்து ஒரு வலுவான ஆணையைக் கோருவதாக Mark Carney தெரிவித்தார்.
தனது முதலாவது தேர்தல் பிரச்சார உரையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிகளைக் குறைப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
அவர் கலந்து கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரம்  Atlantic கனடாவில் நிகழ்ந்தது.
ஞாயிறு இரவு St. John’s நகரில்  நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர் பங்கேற்றார்.

Related posts

தமிழர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடும் Toronto நகர சபை இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Ontario-வை உலுக்கிய பேரிடர்: கடுமையான புயல், வெள்ளத்தால் பெரும் சேதம்!

Lankathas Pathmanathan

OPP அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment