September 22, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் நான்காவது நாளாக 700க்கு மேற்பட்ட தொற்றுக்கள் !

Ontarioவில் தொடர்ந்து நான்காவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று 741 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் உறுதிப்படுத்தினர்.

Ontarioவில் சனிக்கிழமை 728, வெள்ளிக்கிழமை 793, வியாழக்கிழமை 711 என புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்தும் அதிகரிக்கிறது.

Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 645 ஆக அதிகரித்துள்ளது.

இது கடந்த வாரத்தில் 573 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

11.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், அல்லது தகுதியுள்ள மக்கள் தொகையில் சுமார் 86 சதவீதம் பேர், இரண்டு COVID தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Related posts

தங்கப் பதக்கத்திற்காக போட்டியிடும் சந்தர்ப்பத்தை தவறவிட்ட கனடா

Lankathas Pathmanathan

Hantavirus பரவல் ஆபத்து கனடாவில் குறைவு: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

ரஷ்யாவை நம்ப முடியாது என கனடிய பிரதமர் கருத்து

Lankathas Pathmanathan

Leave a Comment