தேசியம்
செய்திகள்

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Richard Lehouxக்கு, COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Quebec மாகாணத்தின் Beauce தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான 65 வயதான Lehoux, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை Conservative கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

மிகுந்த எச்சரிக்கையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இந்த விடையத்தை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் Lehoux, COVID தொற்றுக்கு எதிராக முழுமையாகதடுப்பூசி பெற்றவர் எனவும் Conservative கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

Lehoux தொற்றுக்கான சிறிய அறிகுறிகளை மட்டுமே எதிர்கொள்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி மற்றும் முகமூடி அணிவதன் முக்கியத்துவத்தை இந்த உறுதிப்பாடு நினைவூட்டுவதாக இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

Conservative கட்சி இரண்டு நாட்கள் நேரடி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை வியாழக்கிழமை முடித்துள்ள நிலையில், Lehoux தொற்றால் பாதிக்கப்பட்டது எப்போது கண்டறியப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளதாகவும், Conservative கட்சி உறுப்பினர்களுக்கும்  ஊழியர்களுக்கும் இந்த நிலைமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இந்த சூழ்நிலையை கையாள்வதில் அனைத்து பொது சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவார்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

COVID தொற்றின் பரவலைக் குறைப்பதற்கும் கடுமையான நோயைத் தடுப்பதற்கும் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ள கருவியாகும் எனவும் Conservative கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.

Conservative கட்சியின் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்ற விபரத்தை வெளியிட கட்சித் தலைவர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றார்.

2019ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernierக்கு எதிராக அவரது தொகுதியில் போட்டியிட்ட Lehoux தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் மீண்டும் கடந்த September மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு அரசாங்கம் $250 மில்லியன் மானியம்

Lankathas Pathmanathan

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

Lankathas Pathmanathan

Leave a Comment