கனடா முழுவதும் பரவி வரும் தட்டம்மை – measles – நோய் குறித்து சுகாதார அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
தட்டம்மை நோயின் பரவல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் Mark Holland தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இலக்குகளை அடைய நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில் அமைச்சரின் இந்த கருத்து வெளியானது.
இந்த ஆண்டு, Ontario, British Colombia, Saskatchewan. ஆகிய மாகாணங்களில் தட்டம்மை தொற்றின் பரவல் பதிவாகியுள்ளன.
March 4ஆம் திகதி வரை, கனடா முழுவதும் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் உறுதி செய்யப்பட்டனர்.