CUSMA ஒப்பந்தத்தைத் தொடர கனடாவும் Mexico-வும் மீண்டும் உறுதி செய்தன.
அமெரிக்க வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துத் தொடர்வதற்கான தங்களின் உறுதியை கனடாவும் Mexico-வும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
சீனாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் இடையே, கனடியப் பிரதமர் – Mexico ஜனாதிபதியை சந்தித்தார்.
வருடாந்த மறு ஆய்வுக்கு உட்பட்டுள்ள முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை தக்கவைத்து, வட அமெரிக்க விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பது குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பில் ஆலோசித்தனர்.
கடந்த ஆண்டு Mark Carney, Mexico சென்றிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ‘கனடா-Mexico விரிவான மூலோபாய கூட்டாண்மையின் முதலாம் ஆண்டு நிறைவை இரு தலைவர்களும் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.
கனடாவுடனான Mexico-வின் சிறப்பான இருதரப்பு உறவு தமது முதன்மை கவனம் என இந்த சந்திப்பு குறித்து Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு வர்த்தகம் 19 சதவீதம் அதிகரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
