September 20, 2026
தேசியம்
செய்திகள்

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் திங்கள்கிழமை (12) நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Liberal கட்சியின் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் Charles Sousa போட்டியிடுகிறார்.

இவர் Ontario Liberal அரசின் முன்னாள் நிதி அமைச்சராக இருந்தவராவார்.

Conservative கட்சியின் சார்பில் உள்ளூர் காவல்துறை அதிகாரி Ron Chhinzer போட்டியிடுகின்றனர்.

NDP சார்பில் முன்னாள் மாகாண தொகுதி உதவியாளர் Julia Kole போட்டியிடுகிறார்.

அவர் முன்பு புதிய ஜனநாயகக் கட்சிக்காக மாகாண ரீதியாக போட்டியிட்டவர்.

கடந்த May மே மாதம் Liberal கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Sven Spengemannஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிய பதவி விலகியதையடுத்து அந்த தொகுதியின் ஆசனத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

September மாதம் Conservative கட்சியின் தலைவராக Pierre Poilievre தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நடைபெறும் முதலாவது தேர்தலாகும்.

Related posts

இஸ்ரேலிய இராஜதந்திரிகள் கனடாவில் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

14 Alberta சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம்?

Lankathas Pathmanathan

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு முதலாவது முதற்குடி நபர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment