September 8, 2026
தேசியம்
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Brampton நகரில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

64 வயதான யோகராஜா July 31, புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தேடப்படுகின்றார்.

இவரை கண்டுபிடிக்க Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடி இருந்தனர்.

ஒரு வாரங்களாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், இவரை தேடும் முயற்சியில் Peel பிராந்திய காவல்துறையினருக்கு York பிராந்திய காவல்துறையினர் உதவி வருகின்றனர்.

காணாமல் போன தினமன்று Ontario மாகாண உரிமத் தகடு CFAZ 745 கொண்ட 2019 Grey Honda Odyssey வாகனத்தில் இவர் பயணித்தாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகனம் இறுதியாக செவ்வாய்க்கிழமை (06) King Cityயில் காணப்பட்டதாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினரும் அவரது குடும்பத்தினரும் அவரது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இவரை அல்லது குறிப்பிட்ட வாகனத்தை கண்டவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

இந்த நிலையில் இவர் திட்டமிடப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இவரது தொலைபேசி July 31 மதியம் 12.31 மணி முதல் செயலிழந்து உள்ளதாகவும் குடும்பத்தினர் கூறினர்.

Related posts

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

Lankathas Pathmanathan

Markham Regional Councillor பதவிக்கு முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் போட்டி

Lankathas Pathmanathan

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தொடர்ந்து தவிர்க்கும் கனடியர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment