September 30, 2026
தேசியம்
செய்திகள்

இடைக்கால எதிர்க்கட்சித் தலைவரானார் Andrew Scheer!

Conservative கட்சியின் இடைக்கால எதிர்க்கட்சித் தலைவராக Andrew Scheer தேர்வு செய்யப்பட்டார்.
எதிர்வரும் வசந்த கால அமர்வின் போது நாடாளுமன்றத்தில் கட்சியை வழிநடத்த Andrew Scheer-ரை Conservative கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.
Saskatchewan நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் முன்னாள் கட்சித் தலைவருமான Andrew Scheer, May 26-ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் சபை அமர்வுகளில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பார்.
கடந்த பொதுத் தேர்தலில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தோல்வியடைந்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்தெடுக்கப்பட்டார்.
Carleton தொகுதியில் போட்டியிட்ட Liberal வேட்பாளர் Bruce Fanjoy-இடம், Pierre Poilievre தோல்வியடைந்தார்.
இதன் மூலம் Ottawa பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது இரண்டு தசாப்த பதவி காலம் முடிவுக்கு வந்தது.
விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தலில்  Pierre Poilievre  போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontarioவில் அமுலில் உள்ள, வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு நீட்டிக்கப்படலாம்!

Gaya Raja

August 1 முதல் கனடிய இறக்குமதிகள் மீது 35% வரி?

Lankathas Pathmanathan

COVID தொற்றுக்கு முந்தைய விதிகளுக்கு நாடு திரும்ப வேண்டும்: Conservative

Lankathas Pathmanathan

Leave a Comment