தேசியம்
செய்திகள்

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல்?

Brampton நகர முதல்வர் Patrick Brown-னுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தமிழர் சமூகத்திற்கான அவரது ஆதரவுக்கும் இந்த அச்சுறுத்தலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை என Peel பிராந்திய  காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

Patrick Brown அண்மையில் கொலை மிரட்டலுக்கு ஆளான நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் நகர முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அவரது மனைவி, மகன் ஆகியோரும் இந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டதாகவும் இந்த விசாரணை குறித்து தகவல் அறிந்த தரப்பில் இருந்து தெரியவருகிறது.

இந்த விடயம் குறித்து செவ்வாய்க்கிழமை (15) செய்தியாளர்கள் முன் வைத்த கேள்வியை Peel பிராந்திய காவல்துறை துணைத் தலைவரிடம் முன்வைக்குமாறு Patrick Brown கோரினார்.

குறிப்பிட்ட அச்சுறுத்தல் கனடாவிற்குள் இருந்து வந்ததை Peel பிராந்திய காவல்துறை துணைத் தலைவர் Nick Milinovich உறுதிப்படுத்தினார்.

நகர முதல்வருக்கும் அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இரண்டு வாரங்கள் நீடித்ததாகவும், தமது  விசாரணையின் “வெற்றி” காரணமாக குறிப்பிட்ட

பாதுகாப்பு மீள பெறப்பட்டதாகவும்  Nick Milinovich தெரிவித்தார்.
விரைவில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்களை பகிர்ந்து கொள்ள அவர் உறுதியளித்தார்.

Related posts

இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும்

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை Mark Carney விளக்க வேண்டும் என வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment