September 7, 2026
தேசியம்
செய்திகள்

41 தூதரக அதிகாரிகளை மீளப்பெற கனடாவிடம் இந்தியா வலியுறுத்தல்?

இந்தியாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் திரும்ப அழைக்க வேண்டும் என இந்தியா கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவில் தற்போது 62 கனடிய தூதர்கள் உள்ளனர்

இந்த நிலையில் கனடிய தூதர்களின் எண்ணிக்கை 41 ஆக குறைக்கப்பட வேண்டும் என இந்தியா கூறியுள்ளதாக தெரியவருகிறது

இதனை உறுதிப்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இந்திய, கனேடிய வெளியுறவு அமைச்சகங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில வாரங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான ஆதாரங்கள்  உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த குற்றச்சாட்டை இந்தியா அபத்தமானது என நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் கனேடியர்களுக்கு விசா சேவை முடக்கியதுடன், கனேடிய தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியுள்ளது.

முன்னதாக கனடாவில் இருந்து முக்கிய இந்திய இராஜதந்திரி வெளியேற்றப்பட்டார்.

Related posts

Ottawa வெடிப்பு சம்பவத்தில் இருந்து இரண்டு பேர் மீட்பு

Lankathas Pathmanathan

Hanta தொற்று எச்சரிக்கை காரணமாக மூன்று கனடியர்கள் தனிமைப்படுத்தல்?

Lankathas Pathmanathan

சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment