தேசியம்
செய்திகள்

வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகம்!

வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகமாகிறது.

கனடிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைப்பு (Environment and Climate Change Canada – ECCC) இந்த வண்ணக் குறியீடு கொண்ட அடுக்கு நிலையிலான வானிலை எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துகிறது.

ECCC சுற்றுச்சூழல் கொள்கைகள், திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பான கனடா அரசாங்க துறையாகும்.

ECCC புதன்கிழமை (26) வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியானது.

ஆபத்து, எச்சரிக்கை வகையை வெறுமனே குறிப்பிடுவதற்கு பதிலாக, புதிய எச்சரிக்கைகள் வண்ண அளவை உள்ளடக்கியிருக்கும்:

  • மஞ்சள் (Yellow): அபாயகரமான வானிலை சேதம், இடையூறு அல்லது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்
  • ஆரஞ்சு (Orange): கடுமையான வானிலை குறிப்பிடத்தக்க சேதம், இடையூறு அல்லது உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
  • சிவப்பு (Red): மிகவும் ஆபத்தான, உயிருக்கு ஆபத்தான வானிலை மிகுந்த சேதத்தையும் இடையூறையும் ஏற்படுத்தும்.

தீவிரமான வானிலை மாற்றங்களை  நாங்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில் கனடியர்களுக்கு தெளிவான, துல்லியமான, புரிந்து கொள்ள எளிதான வானிலை எச்சரிக்கைகளை வழங்குவது முன்னெப்போதையும் விட முக்கியமானது என இந்த மாற்றம் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் Julie Dabrusin  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan

New Brunswick அனைத்து தொற்று கட்டுப்பாடுகளையும் கைவிட தயாராகிறது!

Gaya Raja

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment