September 8, 2026
தேசியம்
செய்திகள்

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் Mark Carney

கனடிய பிரதமர் அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அடுத்த வாரம் Washington-னுக்கு பயணிக்கும் பிரதமர் Mark Carney அங்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump -பை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

FIFA உலகக் கோப்பை தொடர்பான நிகழ்வுகளுக்காக அமெரிக்க தலைநகருக்கு செல்லவுள்ளதாக புதன்கிழமை (26) செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் Donald Trump-புடன் பேசியதையும் Mark Carney உறுதிப்படுத்தினார்.

ஆனாலும் இருவரும் பேசிய விடயங்கள் குறித்து அவர் எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.

அமெரிக்கர்கள் மீண்டும் வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

Ontario மாகாண அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கட்டண எதிர்ப்பு விளம்பரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கடந்த மாதம் கனடாவுடன் பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்தினார்.

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக திடீரென அறிவித்த Donald Trump, கனடாவுக்கு எதிராக மேலதிகமாக 10 சதவீத வரியை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

Lankathas Pathmanathan

Mark Carney இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பயணம்

Lankathas Pathmanathan

1 கோடி டொலர் தங்க நகை கடத்தல் – கனடிய தமிழருக்கு எதிரான தண்டனை உறுதி : CBSA தகவல்!

Gaya Raja

Leave a Comment