தேசியம்
செய்திகள்

ஹெய்ட்டியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை விரிவுபடுத்தும் கனடா!

ஹெய்ட்டியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை கனடா விரிவுபடுத்துகிறது.

சூழ்நிலைகள் அனுமதித்தால், புதன்கிழமை (03) முதல் உறவினர்கள், கனடிய நிரந்தர குடியிருப்பாளர்களை வெளியேற்ற கனடா முடிவு செய்துள்ளது.

கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly திங்கள்கிழமை (01) இந்த தகவலை வெளியிட்டார்.

கனடியர்கள் Montreal வந்தடையும் வகையில் ஒரு விமான சேவையையும் கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கனடிய கடவுச்சீட்டுகள் உள்ளவர்களை ஹெய்ட்டியில் இருந்து டொமினிகன் குடியரசிற்கு கனடிய அரசாங்கம் விமானம் மூலம் வெளியேற்ற தயாராக இருப்பதாக கடந்த வாரம் அமைச்சர் Mélanie Joly அறிவித்திருந்தார்.

இந்த ஏற்பாட்டின் கீழ் இதுவரை 153 குடிமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

திங்கட்கிழமை நிலவரப்படி, கனடாவுடன் தொடர்புள்ள 3,110 பேர் தாமாக முன்வந்து ஹைட்டியில் தங்கள் இருப்பை கனடிய அரசாங்கத்துடன் பதிவு செய்துள்ளனர்.

Related posts

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

OPP துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Stanley Cup தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்படுமா Maple Leafs?

Lankathas Pathmanathan

Leave a Comment