தேசியம்
செய்திகள்

Carbon விலை உயர்வுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

Carbon விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் கனடா முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டது.

மத்திய அரசின் carbon விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் திங்கட்கிழமை (01) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் Trans-கனடா நெடுஞ்சாலை, மாகாண எல்லைக் கடவைகளில் போக்குவரத்து தடைபட்டது.

மத்திய அரசின் நுகர்வோர் carbon விலையில் tonne ஒன்றுக்கு $15 அதிகரிப்பு திங்கட்கிழமை நடைமுறைக்கு வந்தது.

பல மாகாணங்களில் போராட்டக்காரர்கள் அரசு கட்டிடங்களில், சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Nova Scotia – New Brunswick, Manitoba – Saskatchewan, Saskatchewan – Alberta, Alberta –  British Columbia ஆகிய மாகாணங்களை இணைக்கும் Trans-கனடா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியையும் போராட்டக்காரர்கள் தற்காலிகமாக தடுத்தனர்.

இந்த விலை அதிகரிப்பை Conservative தலைவர் Pierre Poilievre கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வை இரத்து செய்யுமாறு சில மாகாண முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

கனடிய செய்திகள் – September மாதம் 28ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

அடுத்த ஆண்டு கனடா கடுமையானதும் தவிர்க்க முடியாததுமான மந்த நிலையை நோக்கிச் செல்லும்

Lankathas Pathmanathan

Leave a Comment