தேசியம்
செய்திகள்

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்கும் மத்திய அரசு

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு பில்லியன் டொலர்களை அரசாங்கம் உறுதி செய்கிறது

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (01) தெரிவித்துள்ளது.

பிரதமர் Justin Trudeau, நிதியமைச்சர் Chrystia Freeland ஆகியோர் திங்கட்கிழமை Torontoவில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இதன் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 400,000 குழந்தைகளுக்கு உணவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

April 16 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் டொலர்களை செலவழிக்க விடுத்த அறிவித்தல் ஆளும் Liberal அரசாங்கம் முன்வைத்த 2021 தேர்தல் பிரச்சார வாக்குறுதியை பிரதிபலிக்கிறது.

2024-2025 கல்வியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முயல்வதாக நம்புவதாக நிதியமைச்சர் Chrystia Freeland கூறினார்

தேசிய பாடசாலை உணவு திட்டம் இல்லாத ஒரே G7 நாடு கனடாவாகும்.

Related posts

Ontario அரசாங்கத்தின் வேலைக்கு திரும்பும் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Lankathas Pathmanathan

ஆயுதமேந்திய நபர் குறித்து Quebec மாகாண காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படலாம்: கனடிய பிரதமர் அச்சம்

Lankathas Pathmanathan

Leave a Comment