தேசியம்
செய்திகள்

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் 7 உதவிப் பணியாளர்கள் பலியாகினர்.

இதில் கனடிய-அமெரிக்க இரட்டை குடிமகன் ஒருவர் அடங்குவதாக தெரியவருகிறது.

திங்கட்கிழமை (01) கடல் வழியாக சென்றடைந்த உணவை விநியோகித்துக் கொண்டிருந்த தமது உதவிப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக World Central Kitchen தொண்டு நிறுவனம் கூறியது.

இந்த தாக்குதலுக்கு  கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கண்டனம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்த முழுமையான விசாரணையை கனடா கோருகிறது.

மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என Melanie Joly கூறினார்.

இந்த தாக்குதல்களை கண்டிப்பதாக கூறிய  கனடிய வெளியுறவு அமைச்சர், முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கொலைகளுக்கு முழுப் பொறுப்புக் கூறலையும் கனடா எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர்,  அதை நேரடியாக இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தெரிவிப்போம் எனவும் கூறினார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் “எதிர்பார்க்கப்படாத தாக்குதலை ” நடத்தியதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu, இதில் “அப்பாவி பொதுமக்கள்” கொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்டார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதியில் தமது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக World Central Kitchen தொண்டு நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Related posts

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

சர்வதேச மாணவர்கள் குறித்த அறிவித்தலை வெளியிடும் குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment