தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden அடுத்த வாரம் கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

March மாதம் 23, 24ஆம் திகதிகளில் ஜனாதிபதி Joe Biden கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது.

பிரதமர் Justin Trudeau இதற்கான அறிவித்தலை வெளியிட்டார்.

வர்த்தகத்தை வலுப்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், நடுத்தர வர்க்கத்திற்கு மேலதிக உதவி, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துதல் போன்ற விடயங்களில் இந்த
விஜயத்தில் ஆராய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமரும் ஜனாதிபதியும் உக்ரைனுக்கு ஆதரவு உட்பட பரஸ்பர நலன்களின் உலகளாவிய பிரச்சினைகளில் இந்த பயணத்தின் போது கவனம் செலுத்தவுள்ளனர்.

Related posts

Markham நகர விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணம்

Lankathas Pathmanathan

25 KG போதை பொருள் பறிமுதல் – இரண்டு கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment