Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தமிழர் ஒருவர் தெரிவானார்.
Quebec மாகாணத்தின் நகரசபைத் தேர்தல் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce நகரசபை உறுப்பினராக மிலானி தியாகராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
Montreal நகரின் முதல்வராக தெரிவான Soraya Martinez Ferrada தலைமையிலான Ensemble Montréal கட்சியின் கீழ் மிலானி தியாகராஜா வெற்றிபெற்றார்.
