Montreal நகரின் முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் Soraya Martinez Ferrada தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கனடாவின் இரண்டாவது பெரிய நகரின் முதல்வராக முதல் முறையாக Soraya Martinez Ferrada வெற்றி பெற்றார்.
இவர் Justin Trudeau அரசில் அமைச்சராக பதவி வகித்தவராவார்.
Montreal நகரின் முன்னாள் முதல்வர் Valérie Plante தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தின் எட்டு ஆண்டு ஆட்சியின் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தேர்தலில் Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce நகரசபை உறுப்பினராக மிலானி தியாகராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
Soraya Martinez Ferrada தலைமையிலான Ensemble Montréal கட்சியின் கீழ் இவர் வெற்றிபெற்றார்.
Quebec மாகாணத்தின் நகர சபைத் தேர்தலில் உள்ளூர்த் தலைமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
Quebec மாகாணத்தின் நகரசபைத் தேர்தல் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக பலர் தேர்தல் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
568 நகர முதல்வர் பதவிகள், 4,034 நகரசபை உறுப்பினர் பதவிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களால் நிரப்பப்பட்டுள்ளன.
இதில் Montreal பெரும்பாக பகுதியில் குறைந்தது 14 நகர முதல்வர்களும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்கள் 523 நகர முதல்வர்களையும் 2,761 நகரசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர்.
Sherbrooke நகர முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் Marie-Claude Bibeau தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Quebec City நகர முதல்வராக Bruno Marchand மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Laval நகர முதல்வராக Stéphane Boyer மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
