வரவு செலவுத் திட்ட முன்னுரிமைகள் குறித்து கனடியர்கள் பிளவுபட்டுள்ளனர் என புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.
பிரதமர் Mark Carney, நிதி அமைச்சர் François-Philippe Champagne ஆகியோர் செவ்வாய்க்கிழமை (04) தமது முதலாவது வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.
இந்த வரவு செலவு திட்டத்தில் முதலீடுகளை பிரதமர் அதிகரிக்க வேண்டுமா அல்லது செலவினங்களை குறைக்க வேண்டுமா என்பதில் கனடியர்கள் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
புதிதாக வெளியான Nanos Research கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியானது.
COVID-க்கு முந்தைய கருத்துக் கணிப்பில், 55 சதவீத கனடியர்கள் வரவு செலவு திட்டத்தை சமநிலைப்படுத்துவதை ஆதரித்தனர்.
அதே நேரத்தில் 43 சதவீதம் பேர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நிலையை ஆதரித்தனர்.
February 2023 -ஆம் ஆண்டு, செலவினங்களை குறைக்க ஆதரவான கனடியர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் வரவு செலவு திட்டம் சமநிலைப்படுத்துவதை ஆதரிப்பவர்கள் 56 சதவீதமாக ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தனர்.
புதிய கருத்துக் கணிப்பு இந்த இரண்டு முன்னுரிமைகள் புள்ளிவிவர ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
47 சதவீதம் பேர் முதலீடு செய்வதற்கான பற்றாக்குறையை நிர்வகிப்பது அவர்களின் முன்னுரிமை என கூறுகின்றனர்.
தவிரவும் 48 சதவீதம் பேர் செலவீனங்களை குறைப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றனர்.
கனடியர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு தொடர்ந்து முன்னுரிமையாக உள்ளது.
