தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை இந்த வாரம் குறைக்கும்?

கனடிய மத்திய வங்கி அதன் புதிய வட்டி விகித முடிவை புதன்கிழமை (05) அறிவிக்கவுள்ளது.

மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பிக்கலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வெளியாகவுள்ளது.

நிதிச் சந்தைகள் மத்திய வங்கி அதன் முக்கிய கடன் விகிதத்தை கால் சதவிகிதம் குறைக்கும் என எதிர்பார்க்கிறது.

வட்டி விகிதக் குறைப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem கூறினார்.

ஆனாலும் இந்த முடிவு பொருளாதார தரவுகளால் வழி நடத்தப்படும் என அவர் எச்சரித்தார்.

April மாதத்திற்கான வருடாந்த பணவீக்கம் 2.7 சதவீதமாக இருந்தது.

March மாதத்தில் பணவீக்கம் 2.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை Ontario-வில்

Lankathas Pathmanathan

மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் Liberal கட்சியில் இணையலாம்?

Lankathas Pathmanathan

March மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை Ontarioவில் மிகக் குறைந்த COVID தொற்று!

Gaya Raja

Leave a Comment