தேசியம்
செய்திகள்

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

சிறுபான்மை Liberal  அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்டுள்ளது.

Conservative கட்சியின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த திருத்தம் வியாழக்கிழமை 213க்கு 120 என்ற வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. Liberal அரசாங்கத்துடன், Bloc Quebecois, NDP பசுமை கட்சியினர் ஆகியோர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

புதன்கிழமை, ஒரு Bloc Quebecois கட்சியின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான துணைத் திருத்தமும் எளிதில் தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புகளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை வாக்குகளாக கருதுமாறு எதிர்க்கட்சிகளை  Liberal அரசாங்கம் கோரியிருந்தது.

இந்த நிலையில்  அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான பிரதான வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த வாக்களிப்பிலும் வெற்றி பெறுவதற்கு பிரதமர் Justin Trudeauவின் Liberal அரசாங்கத்திற்கு  குறைந்தது ஒரு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவை. தொற்றுக்கு மத்தியில் கனடியர்கள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதை  புதிய ஜனநாயக கட்சி விரும்பவில்லை என கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு $5 பில்லியன் கடனாக வழங்கும் கனடா?

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்மொழியப்பட்ட வரியை இரத்து செய்யும் Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment