தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கனடிய நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க்கிழமை கனடிய நாடாளுமன்றம் சென்றிருந்த இவர்கள் இருவரையும் சில கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த உரையாடலின் போது இலங்கைத்தீவில் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும், வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களாக சட்டவிரோத காணி அபகரிப்பு, வள சுரண்டல்கள் ஆகியவற்றுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்குப் பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் சில திட்ட முன்மொழிவுகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்துள்ளனர்.

கனடிய அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வு திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை ஸ்ரீலங்கா அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

Related posts

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

Rideau ஆற்றில் விழுந்த பதின்ம வயது இளைஞர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment