தேசியம்
செய்திகள்

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வழிபாடு

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இறந்த குழந்தைகளுக்காக Laval தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.

Montreal புறநகர்ப் பகுதியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (08) காலை மாநகரப் பேரூந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் இறந்தனர் – ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் வியாழக்கிழமை (09) மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் பிரார்த்தனை ஒன்று நிகழ்ந்தது.

இதில் பிரதமர் Justin Trudeau உட்பட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பலியான குழந்தைகளில் ஒருவராக Jacob Gauthier வெள்ளியன்று அடையாளம் காணப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (15) காலை நடைபெறவுள்ளது.

இதில் பலியான இரண்டாவது குழந்தையின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

Scarborough பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!