தேசியம்
செய்திகள்

அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரும் Conservatives – Bloc Québécois

கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சமமற்ற அணுகுமுறையை Conservatives, Bloc Québécois கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்த சட்டமூலம் Quebecகில் ஆங்கில சேவைகளை குறைக்கலாம் என சிலர் எச்சரித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட இந்த சட்டம் கனடாவில் ஒரு சிறுபான்மை மொழியாக பிரெஞ்சு மொழியை அங்கீகரிப்பதன் மூலம் அதன் நிலையை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போது நாடாளுமன்ற குழுவின் முன் உள்ளது.

அதன் உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்தின் உட்பிரிவுவை மதிப்பாய்வு செய்கின்றனர்.

Quebec அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சட்டமூலத்தில் ஒரு திருத்தத்தை Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Joel Godin முன்மொழிந்தார்.

பிரெஞ்சு மொழியில் மத்திய அரசு வழங்கும் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த இந்த திருத்தம் முன்மொழிகிறது.

இந்த மாற்றத்தை தனது கட்சி விரும்புகிறது என Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Mario Beaulieu தெரிவித்தார்.

ஆனாலும் இது பிரெஞ்சு மொழியில் எந்த புதிய சேவைகளையும் இணைக்காது என கூறிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather அதன் விளைவு ஆங்கில சேவைகளில் மட்டுமே இருக்கும் என சுட்டிக் காட்டினார்.

Related posts

Ontario: எட்டு 8 மாதங்களில் முதல் முறையாக 500க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

Lankathas Pathmanathan

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!