தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட தயாராகும் Mississauga நகர முதல்வர்

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட Mississauga நகர முதல்வர் Bonnie Crombie தயாராகி வருகிறார்.

63 வயதான Bonnie Crombie, Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரைவில் தனது பெயரை முறையாகப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது தேர்தலுக்கான ஒரு ஆய்வுக் குழுவை Bonnie Crombie அமைத்துள்ளார்.

Peel பிராந்தியத்தை Ontario மாகாண அரசாங்கம் கலைப்பதாக அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த தகவல் வெளியானது.

இந்த நிலையில் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேளையில் நகர பிதா  பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அவர் தெரிவித்தார்

2014ஆம் ஆண்டு Mississauga நகர முதல்வராக Bonnie Crombie தெரிவானார்.

அதற்கு முன்னதாக அவர் நகரசபை உறுப்பினராகவும், Mississauga-Streetsville தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது.

Ontario Liberal தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.

இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்.

Ontario Liberal புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related posts

உக்ரைனுக்கு 7 மின் மாற்றிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

முகக் கவச கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படமாட்டாது: Alberta முதல்வர்

Lankathas Pathmanathan

கனடிய பிரதமருக்கும் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment