தேசியம்
செய்திகள்

Montreal நகர யூதப் பாடசாலை மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு

Montreal நகரில் உள்ள யூதப் பாடசாலை இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது.

இந்த வாரம் இரண்டாவது முறையாக இந்த பாடசாலை ஞாயிற்றுக்கிழமை (12) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது.

ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் இந்த பாடசாலை அமைந்துள்ள Côte-des-Neiges பகுதிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

அங்கு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் யூதப் பாடசாலையின் முகப்பில் துப்பாகி துளைகளைக் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவத்தின் போது கட்டிடத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் சம்பவ இடத்தில் இருந்து ஒரு வாகனம் வேகமாகச் செல்வதைக் கண்டதாக Montreal காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வாரத்தில் Montreal யூத பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே நிகழ்ந்த முதல் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் வெறுப்பு குற்றங்கள் என விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

 

Related posts

சரக்கு புகையிரதங்கள் மோதியதில் ஒருவர் காயம்

Gaya Raja

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan

நான்கு மாகாண, பிரதேசங்களின் இணையதளங்கள் செயலிழந்தன

Lankathas Pathmanathan

Leave a Comment