November 15, 2025
தேசியம்
செய்திகள்

பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கும் கனடா?

சர்வதேச மாணவர்கள் மீதான கனடாவின் கட்டுப்பாடுகள் இந்திய விண்ணப்பதாரர்களை கடுமையாக பாதித்துள்ளதாக கனடிய அரசாங்க தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை கனடா நிராகரித்து வருவது தரவுகளில் தெரியவருகிறது.

August மாதத்தில் கனடாவுக்கான இந்திய மாணவர் அனுமதி விண்ணப்பங்களில் நான்கில் மூன்று நிராகரிக்கப்பட்டன என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கனடாவின் குடிவரவுத் துறையின் புள்ளிவிவரங்கலின் பிரகாரம், August 2025-இல் சுமார் 74 சதவீத இந்திய விண்ணப்பதாரர்களுக்கு கல்வி அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இதனால் முன்னர் விரும்பத்தக்க இடமாக இருந்த கனடா, இந்திய மாணவர்களுக்கு அதன் கவர்ச்சியை இழந்து வருகிறது.

2025-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, சர்வதேச மாணவர் அனுமதிகளின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளது.

தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் மாணவர் அனுமதி தொடர்பான மோசடிகளைத் தடுப்பதற்குமான ஒரு பரந்த முயற்சியின் பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

August மாதத்தில் கனடாவின் முதுகலை கல்லூரிகளில் கல்வி கற்பதற்கான அனுமதி கோரி இந்தியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டன.

இந்த எண்ணிக்கை August 2023-இல் சுமார் 32 சதவீதமாக இருந்ததாக கனடிய குடிவரவுத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு நேர்மாறாக, அந்த ஒவ்வொரு மாதத்திலும் ஒட்டுமொத்தமாக சுமார் 40 சதவீத கல்வி அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

August 2025-இல் சுமார் 24 சதவீத சீன மாணவர்களின் கல்வி அனுமதிகள் நிராகரிக்கப்பட்டன.

August  2023-இல் 20,900 ஆக இருந்த இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் August 2025-இல் 4,515 ஆக குறைந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச மாணவர்களின் வருகையில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

August மாதத்தில், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக கல்வி அனுமதி மறுப்பு விகிதத்தையும் இந்தியா கொண்டிருந்தது.

1,000 வரையிலான இந்திய மாணவர்களுக்கு மாத்திரம் August மாதத்தில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

2023-ஆம் ஆண்டில், மோசடியான கல்வி அனுமதி கடிதங்களுடன் தொடர்புடைய 1,550 கல்வி அனுமதி விண்ணப்பங்களை கனடிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவற்றில் பெரும்பாலானவை இந்தியா மாணவர்களுடன் தொடர்புடையவை என கனடாவின் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

CTC இரண்டு புதிய இயக்குநர்களை நியமித்தது!

Lankathas Pathmanathan

துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகள்

Lankathas Pathmanathan

கனடா – இந்தியா பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment