தேசியம்
செய்திகள்

கனடாவில் விரைவில் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுகள்?

புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வரவிருக்கும் வாரங்களில் அரசாங்கம் முன்வைக்கும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

21 பேர் கொல்லப்பட்ட Texas ஆரம்ப பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

முன்னைய காலங்களில் Liberal அரசாங்கம் கனடாவின் துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது.

இதை மேலும் வலுப்படுத்த கடந்த தேர்தலில் Trudeau உறுதியளித்திருந்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, அவரது ஆணையின் ஒரு பகுதியாக, தொடர்ச்சியான துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னேறும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் துப்பாக்கி உரிமம் சரிபார்ப்புகள், வணிகப் பதிவுகளை வைத்திருப்பது தொடர்பான விதிமுறைகளின் சமீபத்திய அறிவிப்புகளும் உள்ளடங்குகின்றது.

Related posts

நாடு முழுவதும் COVID தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது

Lankathas Pathmanathan

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளில் கனடாவில் நீதிக்கான நடைபயணம்!

Gaya Raja

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!