தேசியம்
செய்திகள்

கனடாவில் 26 Monkeypox தொற்றுக்கள் உறுதி!

கனடாவில் இதுவரை 26 Monkeypox தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை (26) இந்த தகவலை வெளியிட்டது.

Quebec மாகாணத்திற்கு வெளியே முதலாவது Monkeypox தொற்றை வியாழனன்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Ontario மாகாணத்தில் முதலாவது Monkeypox தொற்று வியாழனன்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தொற்று குறித்த புரிதல் இன்னும் வளர்ச்சியடைந்து வருவதாக கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo கூறினார்.

சமீபத்திய ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த தொற்று பாலியல் செயல்பாடுகளில் இருந்து பரவுவதற்கு மட்டுப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த தொற்று குறித்த தவறான புரிதல் எதிர்மறையான உடல்நல விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்த தொற்றை எதிர்கொள்வதற்கு பெரியம்மை தடுப்பூசி மூலம் இலக்கு வைக்கப்பட்ட தடுப்பூசி வழங்களில்  கவனம் செலுத்துவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம்  கூறியுள்ளது.

COVID தொற்றை எதிர்கொண்டது போல ஒரு பரவலான  தடுப்பூசி பிரச்சாரம் இதற்கு அவசியம் என நம்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர் வெற்றி பெறும் கனடாவின் Paralympic வீரர்கள்

Lankathas Pathmanathan

காசாவில் காணாமல் போன கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர்

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!