தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ரஷ்யர்கள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்

பிரதமர் Justin Trudeau தனது ஒரு வார கால ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை (11) மீண்டும் கனடா பயணமானார்.
நான்கு நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தில் Trudeau பல்வேறு பங்காளி நாடுகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டார்.

இங்கிலாந்து, Latvia, Germany, Poland ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட Trudeau, தனது சந்திப்புகளில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்க வலியுறுத்தினார்.

போலந்து தலைநகரில் இருந்து வெள்ளியன்று மீண்டும் கனடா திரும்புமுன், ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putinனுடனான நெருங்கிய உறவுகளுக்காக மேலும் ஐந்து ரஷ்யர்கள் மீது  பிரதமர் Trudeau பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்.
இவர்களில்  Regina Saskatchewanனில் உருக்கு இரும்பு ஆலை ஒன்றை நடத்தும் Evraz என்ற இங்கிலாந்தின் பன்னாட்டு உற்பத்தி நிறுவனத்தில் முக்கிய பங்குதாரர் அடங்குகிறார்.
இவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், ரஷ்யாவில் உள்ள 32 இராணுவ நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

Related posts

Montreal மருத்துவமனை அவசர பிரிவில் நெரிசல் நிலை

Lankathas Pathmanathan

Albertaவும் British Colombiaவும் மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை விரிவுபடுத்துகிறது!

Gaya Raja

இரண்டு வருடங்களின் பின்னர் கனடாவில் Blue Jays!!

Gaya Raja

Leave a Comment