தேசியம்
செய்திகள்

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Alberta அரசாங்கம் அறிமுகபடுத்தியுள்ள சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டம்  தவறு என்ற கருத்தை முதல்வர் Danielle Smith நிராகரித்தார்.

ஆனாலும் இறையாண்மைச் சட்டம் அதன் வார்த்தைகளில் சரியானதாக இருக்கவில்லை என அவர் ஒப்புக் கொண்டார்.

இறையாண்மைச் சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள், அந்த சட்டத்தை தெளிவுபடுத்தும் இயல்பான செயல்முறையை பிரதிபலிக்கிறது என Smith கூறினார்.

தனது இறையாண்மை சட்டத்தில் சரிபார்க்கப்படாத அதிகாரங்களை அறிமுகப்படுத்தியதற்காக அவர் பரவலாக தொடர்ந்தும் விமர்சிக்கப்படுகிறார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாகாண அதிகார வரம்பில் தலையிடும் மத்திய அரசின் எல்லை மீறல்கலை எதிர்க்க முடியும் என Alberta மாகாணம் கூறுகிறது.

இந்த இறையாண்மைச் சட்டம், சட்டங்களை மாற்றுவதற்கு அமைச்சரவைக்கு  ஒருதலைப்பட்ச அதிகாரங்களை வழங்குகிறது.

Related posts

முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ள பாப்பரசர்

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களுக்கான அவசர பயணத் திட்டத்தை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் 100 மில்லியன் டொலர் முதலீடு

Lankathas Pathmanathan

Leave a Comment