தேசியம்
செய்திகள்

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாடு கட்டாயமாகிறது?

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாட்டை கட்டாயமாகக் கொண்ட முதல் கனடிய மாகாணமாக Alberta மாறவுள்ளது.

வாகன ஓட்டுநர் அட்டைகள், அடையாள அட்டைகளில் கனடிய குடியுரிமை உறுதிப்பாட்டு அடையாளங்கள் இடம்பெறும் என Alberta மாகாண அரசாங்கம் திங்கட்கிழமை (15) அறிவித்தது.

கனடாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் இந்த கட்டாய மாற்றம், 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வரும் என மாகாண முதல்வர் Danielle Smith செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Alberta வாசிகள் நிதியுதவி, மாணவர் உதவி, சுகாதாரஉதவி, ஊனமுற்றோர் நல உதவி போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க இது அனுமதிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் Alberta வாசிகள் தங்கள் அடையாளத்தையும் குடியுரிமையையும் ஒரே ஆவணத்தைப் பயன்படுத்தி நிரூபிக்க முடியும் என முதல்வர் Danielle Smith கூறினார்.

Alberta-வில் வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள், குடியுரிமை பெறாதவர்களின் அடையாள அட்டையில் எந்த அடையாளங்களும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.

எமது ஜனநாயகம்  பாதுகாக்கப்படுவதை இந்த மாற்றம் உறுதிப்படுத்தும் என கூறிய அவர், இது தேர்தல்கள் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நகர்வை மாகாண எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.

Related posts

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment