Florida தொடர்மாடி கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மூன்றாவது கனேடியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.
தனியுரிமைச் சட்டம் காரணமாக, இறந்த கனேடியர்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை.
இந்தத் தொடர் மாடிக் கட்டடம் June மாதம் 24ஆம் திகதி இடிந்து விழுந்ததில் நான்கு கனேடியர்கள் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .