தேசியம்
செய்திகள்

CBSA வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

CBSA ஊழியர்களின் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்கான தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கனடாவின் எல்லை தொழிலாளர்கள் இந்த வாரம் திட்டமிட்ட வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுச் சேவை கூட்டணி (Public Service Alliance of Canada – PSAC), சுங்க, குடிவரவு ஒன்றியம் (Customs and Immigration Union – CIU) ஆகியவற்றின் தொழிற்சங்கம் மத்திய அரசாங்கத்துடன் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது
PSAC, CIU இணைந்து 9,000க்கும் மேற்பட்ட CBSA தொழிலாளர்களை பிரதிநிதிகளாக கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க தொழிற்சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்காலிக ஒப்பந்தத்தின் விவரங்கள் வியாழக்கிழமை (13) உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தொழிற்சங்கம் கூறியது.

இந்த உடன்பாடு ஏற்படவில்லை என்றால் CBSA  வேலை நிறுத்தம்  வெள்ளிக்கிழமை (14) ஆரம்பிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதுபோன்ற ஒரு வேலை நிறுத்தம் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என நிதி அமைச்சர் Chrystia Freeland கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Related posts

Alberta மாகாணத்திலும் புதிய குழந்தை பராமரிப்பு திட்டம்

Lankathas Pathmanathan

Donald Trump முன்வைக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக கனடிய அரசியல் தலைவர்கள் அழுத்தம்

Lankathas Pathmanathan

பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த Mark Carney – Donald Trump இணக்கம்?

Lankathas Pathmanathan

Leave a Comment