Toronto நகரிலும் அதன் சுற்றுவட்டார GTA பகுதிகளிலும் வீடு விற்பனை September மாதத்தில் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
GTA பகுதியில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, September மாதத்தில் வீடுகள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் வரை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Toronto பிராந்திய வீடு விற்பனை வாரியம் (TRREB) செவ்வாயகிழமை (06) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சந்தை நிலவர அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியானது.
September மாதத்தில் TRREB ஊடாக மொத்தம் 5,040 வீடுகள் கைமாறியுள்ளது.
இது 2025 September மாதத்தை விட 9 சதவீதம் குறைவாகும்.
மேலும் August மாதத்துடன் ஒப்பிடுகையில் வீடு விற்பனை 5.2 சதவீதம் சரிந்து, கடந்த February மாதத்திற்கு பின்னர் மிக மோசமான மாதாந்த வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
GTA பகுதியில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி விலை கடந்த ஆண்டை விட 5.1 சதவீதம் குறைந்து $1,006,409 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல், ஒட்டுமொத்த வீடு விலை குறியீட்டு மதிப்பும் 4.7 சதவீதம் வரை சரிந்துள்ளது.
September மாதம் விற்பனையாளர்கள் தங்கள் சொத்துக்களை சந்தையில் பட்டியலிடுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது.
புதிய வீடுகளின் பட்டியலிடும் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14.4 சதவீதம் சரிந்து 16,500 ஆக முடங்கியுள்ளது.
Toronto நகரசபை தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் வீட்டுச் சந்தையை முற்றிலும் மாற்றி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர்களின் மத்தியில் வீட்டு விலை முதன்மையான கவலையாக உள்ள நிலையில் October 26-ல் தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய நகர முதல்வர், நகர சபை உறுப்பினர்கள் எடுக்கும் உள்கட்டமைப்பு வரிவிதிப்பு முடிவுகள், புதிய நிலப் பரிமாற்ற வரிக் கொள்கைகள் நுகர்வோரின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க மிகவும் அவசியமானதாகும் என TRREB தலைமை நிர்வாகி John DiMichele வலியுறுத்தியுள்ளார்
