தேசியம்
செய்திகள்

Tumbler Ridge பாடசாலை துப்பாக்கிச்சூடு குற்றவாளிக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கர் கைது!

British Columbia (B.C.) மாகாணத்தின் Tumbler Ridge பகுதியில் நிகழ்ந்த பாடசாலை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கி தாரிக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கர் ஒருவரை அமெரிக்க நீதித்துறை கைது செய்துள்ளது.

கைதானவர் 30 வயதான Washington மாநிலக் குடியிருப்பாளர் James Cody Bryant என அடையாளம் காணப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (07) காலை கைது செய்யப்பட்ட இவர், சில மணிநேரங்களுக்குப் பின்னர் Seattle நீதிமன்றத்தில் முதன்முறையாக முன்னிலைப்படுத்தப்படார்.

October 13-ஆம் நடைபெறவுள்ள விசாரணை வரை, அவரை தொடர்ந்து காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கனடிய வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றை February மாதம் நிகழ்த்துவதற்கு முன்னதாக, துப்பாக்கிச் சூட்டாளர 18 வயதான Jesse Van Rootselaar-ருக்கு James Cody Bryant ஆதரவும் பணமும் வழங்கியதாக கூறப்படுகிறது.

Tumbler Ridge துப்பாக்கி சூட்டில் எட்டுப்பேர் பலியாகினர்.

James Cody Bryant துப்பாக்கிச் சூட்டாளர James Cody Bryant-க்கு திட்டமிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கி, இரகசியமாகப் பணமும் அனுப்பி உதவியதாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட அமெரிக்கரான James Cody Bryant, கனடாவின் Tumbler Ridge பாடசாலை துப்பாக்கிச்சூடு படுகொலையை நிகழ்த்திய சந்தேக நபருடன் இணையம் வாயிலாக தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தவிரவும் தாக்குதலுக்குத் தேவையான உத்திகளை பயிற்றுவித்ததோடு, ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்காக James Cody Bryant பணமும் அனுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச பயங்கரவாத கூட்டமைப்பு, படுகொலைச் சதி திட்டங்களுக்கு துணை நின்ற குற்றப்பிரிவுகள் கீழ் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் James Cody Bryant மீது முறைப்படி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளன.

இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

பிரதமரின் தனிப்பட்ட விபரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் RBC முன்னாள் ஊழியர்!

Lankathas Pathmanathan

Toronto நகர சபை இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment