தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடனான உறவு சீரான முறையில் உள்ளது:: Mark Carney

அமெரிக்காவுடனான உறவு சீரான முறையில் உள்ளது என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-புடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை தீர்க்க எந்த ஒப்பந்தமும் இல்லாத போதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என அவர் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் இலையுதிர் காலக் கூட்டத் தொடரின் முதல் கேள்வி நேரத்தில் Mark Carney இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்,

அமெரிக்காவுடனான  பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து Bloc Québécois தலைவர் Yves-François Blanchet எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

எமது வர்த்தக உறவை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சிறந்த வழியாக, கனடாவிற்கும் அமெரிக்க நிர்வாகத்திற்கும் இடையிலான நமது சலுகை பெற்ற நம்பிக்கை உறவை விரைவாக மீண்டும் நிலைநாட்ட முடியும் என நம்பிக்கையுடன் கூற முடியுமா என Yves-François Blanchet கேள்வி எழுப்பினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிரமங்களையும் சவால்களையும் சந்தித்து வருவதை ஏற்றுக் கொண்ட Mark Carney தனது அரசாங்கம் தொடர்ந்தும் கனடாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதில் பெருமை அடைவதாக கூறினார்.

Donald Trump-புடன் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்த பிரதமர், கடந்த வார விடுமுறையிலும் இதுபோன்ற ஒரு உரையாடல் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தினார்.

உக்ரைன் யுத்தம், சீனாவுடனான உறவு குறித்து இந்த உரையாடலில் பேசியதாகMark Carney தெரிவித்தார்.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

September மாத பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment