September 29, 2026
தேசியம்
செய்திகள்

ஒரு தசாப்த இடைவெளிக்குப் பின்னர் அமெரிக்க இராணுவப் பயிற்சியில் ஈடுபடும் கனடா?

12 வருட இடைவெளிக்குப் பின்னர், அமெரிக்க இராணுவப் பயிற்சியில் கனடா தனது நீர்மூழ்கிக் கப்பலை ஈடுபடுத்த உள்ளது.

இந்த ஆண்டு Hawaii கடற்பரப்பில் நடைபெறும் RIMPAC பயிற்சியில் கனடா ஒரு இராணுவ நீர்மூழ்கிக் கப்பலை ஈடுபடுத்தும் என தெரியவருகிறது.

இந்த எதிர்பாராத முடிவு, ஒரு தசாப்த இடைவெளிக்குப் பின்னராக கனடாவின் பங்கேற்பைக் குறிக்கிறது.

HMCS Corner Brook எதிர்வரும் நாட்களில் British Columbia கடற்படைத் தளத்தில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் இரண்டு கனடியப் போர்க்கப்பல்களுடன் இணையும் என கூறப்படுகிறது.

கனடாவின் நான்கு கப்பல்கள் கொண்ட கடற்படையில், HMCS Corner Brook மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரே நீர்மூழ்கிக் கப்பலாகும்.

Related posts

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Gordie Howe சர்வதேசப் பாலத்தின் திறப்பு விழாவை கனடியர்கள் கொண்டாடினர்

Lankathas Pathmanathan

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

Leave a Comment