September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவில் நடைபெறவுள்ள அனைத்துலகத் தமிழர் மாநாட்டுக்காக 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப் பெற்றன!

கனடாவில் நடைபெறவுள்ள அனைத்துலகத் தமிழர் மாநாட்டுக்காக 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் அனைத்துலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் October மாதம் கனடாவில் நடைபெறவுள்ளது.

அனைத்துலகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டை முன்னிட்டு 5 தலைப்புகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டிருந்தன.

June 10-ஆம் திகதி வரை கால எல்லை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் மொத்தமாக 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆய்வரங்க குழுத் தலைவர் நல்லூர் சா. சரவணன் தெரிவித்தார்.

இதில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவிலான ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டில் பங்கேற்கும் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களை உள்ளடக்கிய ஐந்து தலைப்புகளுக்குமான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த அவர்,  இக்குழுக்கள் பரிந்துரைக்கும் தேர்வுசெய்யப்பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வுச்சுருக்கத் தேர்வு குறித்து July மாத ஆரம்பத்தில்  அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பின் கீழ் அனைத்துலகத் தமிழர் மாநாடு October 15 ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி வரை கனடாவின் Toronto நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானம்

Lankathas Pathmanathan

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் உயர்கிறது!

Manitoba வதிவிட பாடசாலை பகுதியில் 190 சாத்தியமான கல்லறைகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment