தேசியம்
செய்திகள்

காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலை

Toronto காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளம் குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Toronto காவல்துறை Const. Marc Pinizzotto-வை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞர், முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை (12) காலை Toronto நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி Nicholas Bennett வெள்ளி காலை Zoom  வழியாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் சனிக்கிழமை (13) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Toronto அமெரிக்க துணைத் தூதரகம் உட்பட நகரில் நடந்த பல துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஐந்து தேடுதல் ஆணைகளில் ஒன்றை வியாழக்கிழமை (11)  செயல்படுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் Marc Pinizzotto சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சுடப்பட்டார்.

காவல்துறை  அதிகாரி ஒருவர் சந்தேக நபரை நோக்கி சுட்டதில், அவர் மீது பலமுறை குண்டு பாய்ந்தது.

இதில் காயமடைந்த சந்தேக நபரும் காவல்துறை அதிகாரியும்  காயங்களுடன் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.

Toronto காவல்துறையினரால்  Nicholas Bennett  என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்த சம்பவம் குறித்த விசாரணையை முன்னெடுத்துவரும் சிறப்புப் புலனாய்வு பிரிவு (SIU) தெரிவித்துள்ளது.

18 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட 43 வயதான அதிகாரி Const. Marc Pinizzotto, Sunnybrook மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க துணைத் தூதரக துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 19 வயதான Zara Jabbi-க்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும் தலைமறைவாக உள்ள அவரை சரணடையுமாறு வலியுறுத்துவதாக Toronto காவல்துறை தலைமை அதிகாரி Myron Demkiw கூறினார்.

அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 18 வயதான Sheldon Tracy-Stewart வியாழன் அதிகாலை நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டார் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கனடாவில் ஒரு மில்லியன் ஐநூறு ஆயிரத்தை தாண்டிய தொற்றுக்கள்!

Gaya Raja

மீண்டும் ஆரம்பிக்கும் Ontario சட்டமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கைவிடும் தீர்ப்பை இரத்து செய்ய முயற்சி!

Gaya Raja

Leave a Comment