தேசியம்
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் Ontario சட்டமன்ற அமர்வுகள்

Ontario சட்டமன்ற அமர்வுகள் செவ்வாய்கிழமை (21) மீண்டும் ஆரம்பிக்கின்றன.

குளிர்கால இடைவேளையின் பின்னர் மாகாண சபை உறுப்பினர்கள் செவ்வாய்கிழமை மீண்டும் சட்டமன்ற அமர்வுக்கு திருப்புகின்றனர்.

இம்முறை சட்டமன்ற அமர்வில் சுகாதாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ontario மாகாணத்தின் வசந்த கால வரவு செலவு திட்டம் March மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்படும்.

கேள்வி நேரத்தின் போது வரவு செலவு திட்டம் குறித்த கேள்விகளும் பிரதான இடம் பிடிக்கவுள்ளது.

அவசர காலச் சட்டம் குறித்த விசாரணை அறிக்கையில் Ford அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் கேள்வி நேரத்தில் அரசாங்கம் கேள்விகளை எதிர்கொள்ளவுள்ளது

புதிய தலைவர் Marit Stiles தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி பங்கேற்கும் முதலாவது அமர்வாக இது இருக்கும்.

Doug Ford அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத, சுற்றுச்சூழலுக்கு எதிரான, தொழிலாளர்-விரோத நிலைப்பட்டுக்கு எதிராக ஒன்றுபட்டவர்களால் எதிர்வரும் சனிக்கிழமை (25) மாகாண சபைக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக Torontoவின் காற்றின் தரம் உலகிலேயே மோசமானதாக உள்ளது!

Lankathas Pathmanathan

30 ஆண்டுகளின் பின்னர் கனடிய அணி Stanley கோப்பையை வெற்றி பெறுமா?

Lankathas Pathmanathan

Leave a Comment