November 16, 2025
தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் Justin Trudeau சாட்சியம் அளிக்க உள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அவசர காலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்க பிரதமர் அழைக்கப்படவுள்ளார்

Ontario முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி Paul Rouleau தலைமையில் பொது ஒழுங்கு அவசர ஆணையம் அடுத்த வாரம் இந்த விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.

1988 ஆம் ஆண்டு சட்டமாக மாறிய பின்னர் முதல் முறையாக இந்தச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதை மதிப்பிடுவது இந்த ஆணையகத்தின் குறிக்கோளாகும்

ஆணையம் சாட்சிகளாக தயாரித்த சுமார் 60 பேர் கொண்ட பட்டியல் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஆனாலும் இதில் பிரதமர் Trudeau உட்பட எட்டு அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland ஆகியோர் இதில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி

Lankathas Pathmanathan

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan

Leave a Comment