தேசியம்
செய்திகள்

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயம்

Ontario மாகாண Woodstock நகருக்கு அருகில் பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.

இவர்களில் ஒரு மாணவர் London நகரில் உள்ள மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தியில் கொண்டு செல்லப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (05) Woodstock நகருக்கு தெற்கே 40 ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.

London நகரில் உள்ள மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தியில் கொண்டு செல்லப்பட்ட ஒரு குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் இதில் காயமடைந்தனர்.

காயமடைந்த ஏனைய நான்கு மாணவர்கள் Woodstock நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் மாணவர்கள் எவருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்த விசாரணை தொடரும் நிலையில், இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என OPP தெரிவித்தது.

Related posts

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

Lankathas Pathmanathan

Conservatives கட்சியின் இடைக்கால தலைவரானார் Bergen

Lankathas Pathmanathan

Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அடையாளம் வெளியானது!

Lankathas Pathmanathan

Leave a Comment