தேசியம்
செய்திகள்

விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

Nashville அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 5 கனடியர்கள் பலியாகினர்.

Nashville நகரின் அருகே ஒற்றை இயந்திர விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் திங்கட்கிழமை (04) நிகழ்ந்தது.

இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர தரையிறக்கத்தின் போது இந்த விமானம் விபத்துக்கு உள்ளானது.

இந்த விமானத்தில் மூன்று சிறுவர்களும் பயணித்தனர்.

இவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த கனடிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் அறிவித்தது.

விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment